சின்னத்தை சொல்வதில் குழப்பம்.. உளறிய அமைச்சர் உதயநிதி : கூட்டத்தில் இருந்து வந்த குரல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 7:59 pm
ud
Quick Share

சின்னத்தை சொல்வதில் குழப்பம்.. உளறிய அமைச்சர் உதயநிதி : கூட்டத்தில் இருந்து வந்த குரல்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஒரு பெண் உதயநிதி ஸ்டாலினுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாகக் கூறினார்.

உடனே உதயநிதி அந்தப் பெண்ணின் மொபைல் போனை வாங்கி மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். பிறகு தொடர்ந்து கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி, தனது ரசிகர்களுடன் போட்டு எடுத்து மகிழ்ந்த குஷியில் சின்னத்தையே தவறாகக் உளறிவிட்டார்.

திருச்சியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், நிலையில் அந்தச் சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்காமல், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொதப்பலாகப் பேசினார். உதயநிதி தப்பாகச் சொன்னாலும் அலர்ட்டாக இருந்த மக்கள் உடனே தீப்பெட்டி சின்னம், தீப்பெட்டி சின்னம் என்று கோஷம் போட்டு உதயநிதிக்கு நினைவூட்டினர்.

கூட்டத்தின் கூச்சலைக் கேட்டு சுதாரித்த உதயநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் தீப்பெட்டி சின்னத்தைச் சொல்லி துரை வைகோவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். உதயநிதியின் உளறல் பேச்சால் சிறிது நேரம் கூடத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.

உதய் இதேபோல பேசுவது முதல் முறை அல்ல. சில தினங்களுக்கு முன் ஓர் இடத்தில் பேசிய உதய் வாக்குப்பதிவு நாள் ஆகஸ்ட் 19ஆம் தேதி என்று கூறி கூடியிருந்தவர்களை எல்லாம் சற்றுநேரம் குழப்பத்தில் ஆழ்த்தினார். பிறகு அருகில் இருந்தவர் சுட்டிக்காட்டியதை அடுத்து வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 19ஆம் தேதி என்று திருத்திச் சொல்லி சமாளித்தார்.

Views: - 223

0

0