காங்கிரஸ் எம்.பி. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

15 November 2020, 11:24 pm
Quick Share

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகமது பட்டேல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரான (எம்.பி) அகமது பட்டேலுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இதற்கிடையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அகமது பட்டேலின் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கொரோனா பாதிக்கப்பட்ட அகமது பட்டேல் குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டேலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் மருத்துவமனை நிர்வாகம்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0