அவ்வளவு அக்கறையா…? பாஜக பாலியல் வீடியோ பற்றி ஏன் கண்டுகொள்ளல..? ஆளுநருக்கு எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி..!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 6:43 pm
mp jothimani - rn ravi - - updatenews360
Quick Share

சென்னை : அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்ட போது, திமுகவிற்கு நடுக்கம் ஏற்பட்டதோ இல்லையோ, அதன் கூட்டணி கட்சிகளுக்குத்தான் வியர்த்துப் போனது. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அவரை நியமனம் செய்ததாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூறி வந்தன. ஆனால், இவர்களின் கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

governor rn ravi - updatenews360

ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டதற்கும், அவர் பதவியேற்றதற்கும் முறைப்படி வாழ்த்து சொல்லி விட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான பணியை தொடர்ந்தார்.

இதனிடையே, ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, அனைத்து துறை செயலர்களுக்கும் தலைமை செயலளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கை விட்டது திமுக கூட்டணி கட்சியினரிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது, அனைத்து துறையின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் சமர்பிக்க தயார் செய்யுமாறு கூறிய உத்தரவுதான் அது.

எதிர்கட்சியாக இருந்த போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது துறை ரீதியான ஆய்வு அறிக்கையை ஆளுநரிடம் சமர்பிக்கும் திமுகவின் முடிவு கூடடணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்தும் ஆளுநரின் நெருக்கடியால் செயல்படுத்தப்பவதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், ஆளுநரின் துறை ரீதியான ஆய்வுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் நலனில் அவ்வளவு அக்கறையுள்ள ஆளுநர் ஏன் பாலியல் பாஜக தலைவர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க ,பாஜகவின் 15 பாலியல்குற்ற வீடியோக்களைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூடாது. ஆளுநர் அவருடைய எல்லையைத் தாண்டுவது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக நிர்வாகிகள் பாலியல் விவகாரத்தில் சிக்கிய போது திமுகவை விட, காங்கிரஸ் நிர்வாகிகளே அதிகம் கொந்தளித்தனர். அதிலும், எம்பி ஜோதிமணி பல புகார்களை காவல்நிலையங்களில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 195

0

0