நான் தான் சிட்டிங் எம்பி… மீண்டும் நான் தான் போட்டியிடுவேன்… காங்கிரஸ் தலைமையிடம் மறைமுகமாக சீட் கேட்கும் எம்பி ஜோதிமணி..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 9:24 am
Quick Share

நான் சிட்டிங் எம்.பி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நான் தான் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 54 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த வகையில், வேடசந்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டிடத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அங்கு பயின்ற மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் :- தேர்தல் வருவதால் தமிழகத்துக்கு அடிக்கடி பிரதமர் வருகை தருகிறார். தமிழகத்தில் எத்தனை நதிக்கு சென்று குளித்தாலும், எத்தனை கடலுக்கு சென்று குளித்தாலும், எத்தனை கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் தமிழகத்தில் பாஜக போட்டி போடுவது நோட்டாவுடன் தான்.

என்மண் என்மக்கள் யாத்திரை மூலமாக தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றங்கள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். நிச்சயமாக பெரிய மாற்றங்கள் இருக்கும் பாஜக நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி.

உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்கு நடந்த யாத்திரை என்றால் அது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடந்த யாத்திரை தான் எங்கு பார்த்தாலும் வசூல் தமிழகத்தில் மொத்த வாசல் ராஜாக்களாக பிரதமர் மோடியும் மாநில தலைவர் அண்ணாமலையில் இருக்கிறார்கள்.

நான் சிட்டிங் எம்.பி நிச்சயமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன். மேலும் கடந்த தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேனோ அதே வாக்கு வித்தியாசத்தில் வரக்கூடிய தேர்தலிலும் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன், என கூறினார்.

  • Lorry Upset 7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!
  • Views: - 176

    0

    0