ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி : முக்கிய அரசியல் தலைவர்களையும் வீழ்த்தும் தொற்று..!!

20 April 2021, 3:32 pm
Rahul_Gandhi_Congress_Updatenews360
Quick Share

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2.59 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. அதோடு, கடந்த 24 மணிநேரத்தில் 1,761 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நோய் தொற்றிற்கு பாமர மக்கள் மட்டுமின்றி முன்னணி அரசியல் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், எம்பி., எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியை போலவே, மத்திய அமைச்சர் ஜிஜேந்தர் சிங்கும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

Views: - 94

0

0