சர்ச்சையான ராகுலின் பாதிரியார் சந்திப்பு ; இந்து கடவுளை மீண்டும் அவமதித்தாரா பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா..?

Author: Babu Lakshmanan
10 September 2022, 2:24 pm
Quick Share

ஒற்றுமை யாத்திரைக்கு நடுவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் ஜோடோ யாத்ரா என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரையை அவர் மேற்கொண்டு வருகிறார். நான்காவது நாளாக இன்றும் அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்றுடன் தமிழகத்தில் தனது நடை பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை கேரளாவில் இதனை தொடருகிறார்.

அவரது நடைபயணத்தின் போது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி வருகிறார்.

அந்த வகையில், நேற்று ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அப்போது இயேசு கடவுளா என ராகுல் காந்தி கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜார்ஜ் பொன்னையா, கடவுளின் உருவம் எனறோ, கடவுளின் குழந்தை என்றோ இயேசு கிறிஸ்துவை சொல்ல முடியாது. ஷக்தியும் கிடையாது. அவர் அனைத்தும் சேர்ந்தவர். சாதாரணமானவர்களைப் போல மனிதன் மனிதன் இணைந்து இயேசு பிறக்கவில்லை. அவர் மற்ற கடவுளின் உருவமும் கிடையாது. அவர்தான் கடவுள்,” எனக் பாதிரியார் கூறினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், ஏற்கனவே சர்ச்சை பேச்சு பேசிய சிறைக்கு சென்ற ஜார்ஜ் பொன்னையா, ‘ஷக்தி’ எனக் குறிப்பிட்டு, மீண்டும் இந்து மதத்தை புண்படுத்திவிட்டாரா..? என்ற விவாதம் எழுந்துள்ளது.

மேலும், ராகுல் – ஜார்ஜ் பொன்னையா சந்திப்பை குறிப்பிட்டு பாஜக உள்ளிட்ட தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 573

0

0