காங்கிரஸ் எம்.பி. வசந்த்குமார் கொரோனாவால் காலமானார்

28 August 2020, 7:17 pm
Nellai Vasanthakumar Byte - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., வசந்த்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்த்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.பி. வசந்தகுமாருக்கு இன்று மாலை நிமோனியா காய்ச்சல் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், 70 வயதான இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஆனால், இதுவரை மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.

கன்னியாகுமரி எம்.பியாக இருந்து வந்த இவர், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 64 கிளைகளில் வசந்த் அன்ட் கோ என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தின் மூலம் தவணை முறையில் பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்து, அவர் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0