காங்கிரஸில் இருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு தாவிய சுஷ்மிதா தேவ்… அதிர்ச்சியில் சோனியா..!!

Author: Babu Lakshmanan
16 August 2021, 4:29 pm
sushmita dev - updatenews360
Quick Share

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் இணைந்தார்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களை சமாளிப்பதா..? அல்லது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதா..? என்பது புரியாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருபதியில் உள்ளனர்.

இப்படியிருக்க, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியே முன்னெடுத்தார். இதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், மகிளா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்பியுமான சுஷ்மிதா தேவ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும் அபிஷேக் பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Views: - 364

0

0