கமல் பக்கம் திரும்பும் அழகிரி…? காங்கிரஸ் கை-யை விடாமல் பிடிக்க முயற்சிக்கும் ஸ்டாலின்..!!!

4 March 2021, 4:26 pm
kamal - ks alagiri - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஆனால், பெரும்பாலும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

Sonia_Rahul_UpdateNews360

இதனால், திமுக கூட்டணியில் காங்கிரசை வைத்துக் கொள்ளலாமா..? என்ற எண்ணத்தில் ஸ்டாலின் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக எத்தனை இடங்கள் ஒதுக்கினாலும் பெற்றுக் கொள்வோம் என அறிவித்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேவேளையில், காங்கிரஸே இறங்கி வந்து விட்டது என்பதால், ராஜ்யசபா சீட்டுக்காக அக்கட்சியை பெயரளவுக்கு கூட்டணியில் வைத்துக் கொள்ளலாம் என்று மனக்கணக்கு போட்டு, தொகுதியை ஒதுக்குவதையும் திமுக குறைத்து விட்டது.

ஆனால், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முன்பை விட மக்களின் கூட்டம் அலைமோதியது. எனவே, மக்களிடையே காங்கிரஸ் அலை வீசுவதாகக் கருதி அக்கட்சியினர், குறைந்த பட்சம் 30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், திமுகவோ, 20 முதல் 25 இடங்களை கொடுப்பதாக தெரிவித்து வருகிறது.

dinesh gundu rao - congress - updatenews360

இது தொடர்பாக இரு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அவரும் 30 இடங்களுக்கு கீழ் கொடுத்தால் வாங்க வேண்டாம் என கறாராக சொல்லி விட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து திரும்பிய கையோடு காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, 30 தொகுதிகளுக்கு கீழ் கொடுத்தால் திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்றும், 3வது அணிக்கு மாறி விடலாம் என யோசனைகளை முன்வைத்ததாகக் சொல்லப்படுகிறது.

நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசனும் இன்னும் 3 தினங்களுக்கு கூட்டணிக்கு வருபவர்கள் வந்து விடுங்கள் எனக் கூறியிருந்தார்.

kamal haasan - updatenews360

இந்த சூழலில் திமுகவி தொகுதி பங்கீட்டு குழு மற்றும் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்ததாக என்ன செய்வது என்பது பற்றிய திட்டத்தையும் அவர் கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக இறங்கி வராவிட்டால், அடுத்து மக்கள் நீதி மய்யத்துடன் கையை கோர்த்து விடலாம் என்பது காங்கிரஸ் கட்சியினரின் முடிவாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ஸ்டாலினுடன் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டு, பின்னர் கூட்டணி குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடும் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய கட்சிகளிடம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி சரிகட்டுனமோ.. அதேபோன்று காங்கிரஸையும் சரிகட்டி விடலாம் என்பது ஸ்டாலினின் மனக்கணக்காக இருந்து வருகிறது.

Views: - 22

0

0