பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலையும் உயர்வு : அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 9:25 am
Gas Cylinder - Updatenews360
Quick Share

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50காசுகளில் இருந்து ரூ.850.50 காசுகளாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50காசுகளில் இருந்து ரூ.850.50 காசுகளாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.850.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 காசுகள் விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 273

0

0