ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் கேஸ் விலை: மீண்டும் ரூ.25 உயர்வு…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
1 March 2021, 8:47 amசென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது.
ஆனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும். அப்படித்தான் பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.810லிருந்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச்சில் மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.810லிருந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0