குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நினைவுத் தூண்: ராணுவம் சார்பில் அளவீடு பணி தொடங்கியது..!!

Author: Aarthi Sivakumar
6 January 2022, 12:39 pm
Quick Share

குன்னுார்: குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தில் ராணுவம் சார்பில் நினைவு தூண் அமைக்க அளவீடு பணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கி சிதைந்த ஹெலிகாப்டர் பாகங்கள் கோவை சூலுார் விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்டன. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதியின் ‘சீல்’ அகற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த இடத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், இங்கு வந்து செல்லும் மக்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மேலும், சமூக ஆர்வலர்கள் இங்கு நினைவுத் துாண் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ராணுவத்தினர் சார்பில் நினைவு தூண் அமைப்பது தொடர்பாக அளவீடு செய்யும் பணி துவங்கியது. இங்கு விரைவில் துாண் அமைக்கவும், தொடர்ந்து ராணுவம் சார்பில் மலரஞ்சலி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இடத்துக்கு சாலை அமைக்க ராணுவம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன், சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 315

0

0