தமிழகத்தில் 3வது அலையா..? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பகீர் தகவல்..!!!

Author: Babu Lakshmanan
23 October 2021, 10:01 am
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 3வது அலைக்கு வாய்ப்பு இருக்கிறதா..? இல்லையா..? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 6வது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு இந்த நிலையில், சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- தமிழகத்தில் இன்று நடக்கும் 6வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 2வது தவணையை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டு இருக்கின்றனர். இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3வது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அதனால், வராது எனக் கூற முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 444

0

0