அக்டோபரில் உச்சம்பெறும் 3வது அலை : இந்தியாவை எச்சரிக்கும் நிபுணர் குழு..!!
Author: Babu Lakshmanan23 August 2021, 5:09 pm
இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை அக்டோபர் மாதம் உச்சம்பெறும் என்று மத்திய அரசின் நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது. தற்போது 2வது அலைக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் 3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. மேலும், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, கட்டுக்குள் இருந்த கொரோனா, நாடு முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 3வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலை இருக்கக் கூடும் என்று கணித்துள்ளது. மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.
0
0