கொரோனா 3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு : தமிழக அரசு நியமனம்

Author: Babu Lakshmanan
6 August 2021, 1:27 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்றின் 3வது அலை பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு மற்றும் நடவடிக்கையினால் தற்போது தணிந்துள்ளது. தினசரி சராசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா 3வது அலை தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 3வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

Views: - 303

0

0