கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : அரசியல் கட்சியினர் அதிர்ச்சி

16 September 2020, 7:54 pm
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி பள்ளி துர்கா பிரசாத் ராவ் இன்று உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆந்திரா இருந்து வருகிறது. எனவே, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி பள்ளி துர்கா பிரசாத் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0