தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கொரோனா CLUSTER : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 10:47 am
Corona Cluster -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில், தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கொரோனா cluster கண்டறியப்பட்டுள்ளது என்றும், முதியவர்கள் அலட்சியமாக இருக்காமல் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், இதுவரை, 4.19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 141

0

0