கிராம தலைவரால் உருவான கொரோனா இல்லா கிராமம்: சாத்தியமானது எப்படி?

1 June 2021, 4:52 pm
Quick Share

மும்பை: மஹாராஷ்டிராவில் ஒரு கிராம தலைவரின் வழிகாட்டுதலால் கொரோனா இல்லாத கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் காத்னே என்ற கிராமம் கொரோனா இல்லாத கிராமமாக உருவாகி உள்ளது. 1,500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தின் தலைவரான ருத்துராஜ் தேஷ்முக் எடுத்த நடவடிக்கைகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

21 வயதான இவர் மாநிலத்தின் மிகக் குறைந்த வயதான கிராமத் தலைவர். இதுகுறித்து ருத்துராஜ் தேஷ்முக் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் ஏப்ரலில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதனால் பீதியடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களில் தங்க சென்றனர்.

Maharastra_Liquor_UpdateNews360

இதையடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நானும், என் குழுவும் சேர்ந்து ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தோம். கொரோனா பரிசோதனை செய்தல், பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றினோம்.கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அவர்களின் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்தோம்.


கிராமத்திற்கு வெளியே செல்லும் நபர்களுக்கும், உள்ளே வரும் நபர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது எங்கள் கிராமத்தில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 131

0

0