கொரோனா நிதியாக ஒரு நாள் சம்பளம் ரூ.150 கோடி : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்னும் தாராளம் காட்டலாமே?

17 May 2021, 6:07 pm
Jacto Geo 1 - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட இந்நோய் தொற்று தற்போது கிராமங்களிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் 33 ஆயிரமாக உள்ளது.

COVID-19: Tamil Nadu tests over 60,000 people in a day, records 6,472 new  cases, 88 deaths- The New Indian Express

தமிழக அரசு என்னதான் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, தீவிர கண்காணிப்பு மேற்கொண்டாலும் பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. வாகனங்களின் இயக்கத்தை பார்த்தால் ஊரடங்கு அமலில் இருப்பது போலவே தெரியவில்லை. அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் பொதுமக்களால், கொரோனா கட்டுக்குள் வராமல் பூச்சாண்டி காட்டுகிறது.

தொற்று பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் அன்றாடம் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை, மருத்துவ சிகிச்சை, மருந்து மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல்
என்று பல்வேறு நிலைகளில் அரசுக்கு செலவீனம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பதால், இந்த செலவு நாள்தோறும் இன்னும் அதிகரிக்கிறது.

இதனால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த பேரிடர் கால நிவாரண நிதியாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் தாராள நன்கொடை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசுக்கு தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருணை உள்ளத்தோடு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

PE fund Creador to sell Corona Remedies stake; eyes Rs 2,400 cr valuation -  The Economic Times

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பான ஜாக்டோ- ஜியோவும் தங்களது ஒருநாள் சம்பளமான 150 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கப் போவதாக அறிவித்து இருக்கிறது. இது பாராட்டத்தக்க விஷயம்.

அதுபோன்றதொரு தொகை சாமானிய மக்களிடமிருந்து, அரசுக்கு கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், கொரோனா முதல் அலை தொடங்கிய கடந்தாண்டு மார்ச் இறுதி முதல் இதுவரை தமிழ் நாட்டில் தனியார் நிறுவனங்களில் வேலை இழந்தோர் 25 லட்சத்துக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறு மற்றும் குறு தொழில் செய்வோர், நடைபாதைக் கடைக் காரர்கள், வியாபாரிகள், சிறு வணிகர்கள் என 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய ஓரளவு பொருளாதாரம் மீண்டாலும் கூட ஏப்ரல் முதல் வாரம் தொடங்கிய கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் முந்தைய பரிதாப நிலைக்கே லட்சக்கணக்கான குடும்பங்கள் சென்றுவிட்டன.

தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த நெருக்கடியை சமாளிக்க மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு
இந்த மாதம், முதல் தவணையாக 2,000 ரூபாயும் அடுத்த மாதம் 2,000 ரூபாயும் வழங்குகிறது. இது தவிர ரேஷன் கடைகள் மூலம் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி பலசரக்கு போன்ற 14 வகை மளிகைப் பொருட்களையும் வழங்க இருக்கிறது.

MK Stalin launches Rs 2,000 each for 2 crore ration card holders as corona  relief || கொரோனா நிவாரணத்தொகையாக 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2  ஆயிரம் வழங்கும் திட்டம் மு.க ...

இப்படி அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களும் அரசின் உதவியை மட்டுமே நம்பி இருப்பதால் இவர்களிடமிருந்து பெரிய அளவில் கொரோனா நிவாரணநிதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் தங்கதுரை என்பவர் தனது ஒரு மாத சம்பளமான 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக அரசு கணக்கில் சேர்த்து இருக்கிறார். இதையறிந்த முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் வரவழைத்து நன்றியும் தெரிவித்தார்.

தனது குடும்பம் கஷ்டப்படும் சூழலிலும் அந்தக் காவலாளி மனிதாபிமானத்துடன் இதுபோல் நிதி உதவி வழங்கி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “நமக்கு தாராளமாக நிதி உதவி கிடைக்க பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இதற்கு கருணை கொண்ட பெரிய மனது தான் தேவை.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 12 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை, கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப் போவதாக அறிவித்து இருப்பது பாராட்டத்தக்கது.

அதேநேரம் இவர்கள் இன்னும் பெரிய அளவில் மனது வைத்தால் தமிழக அரசு அனைவரிடமும் நிதி கேட்கும் பிரச்சனைக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளமாக மட்டும் ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுதவிர ஓய்வூதியமாக ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் கடந்த 15 மாதங்களாக முழு அளவுக்கு பணிக்கு செல்லவில்லை. பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியேதான் வேலை செய்து வருகின்றனர்.
முழுச் சம்பளமும் பெற்று வருகிறார்கள்.

எனவே, இவர்கள் தங்களது ஆண்டு சம்பளத்தில் பாதியை மாநில அரசுக்கு மனமுவந்து கொடுத்தாலே கொரோனாவை சமாளிப்பதற்கான 26 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு முழுமையாக கிடைத்துவிடும்.

அதேபோல் அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதியான 4 ஆயிரம் ரூபாயை இவர்கள் வாங்காமல் தவிர்த்தாலும் தமிழக அரசுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை கிடைக்கும். தமிழக அரசிடம் ஓய்வூதியம் பெறுவோரும் இதுபோல் விட்டுக்கொடுத்தால் இன்னும் ஓரளவு நிதி தமிழக அரசுக்கு வந்து சேரும்.

பாதிச் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியுமா? என்று அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் கேட்கலாம்.

Jacto Geo Strike - ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க  அரசு தீவிரம்

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களும், பள்ளி, கல்லூரிகளும் தங்களிடம் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று நகர்ப்புறங்களில் வாழ இருவர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் குறைந்த பட்சம் 22 ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும். கிராமப்புறங்களில்
14 ஆயிரம் ரூபாய் அவசியம். இந்தத் தொகையை வைத்து, பல லட்சக்கணக்கான குடும்பத்தினர் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்த தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால், அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் வாங்கும் பாதி மாதச் சம்பளம் இதை விட அதிகமாகவே இருக்கும். எனவே அரசுக்கு மாதத்தில் தங்களது15 நாள் சம்பளத்தை அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் கொரோனா காலம் முடியும்வரை விட்டுக் கொடுத்தால் தமிழகத்தில் தற்போதுள்ள நிதி நெருக்கடியை அரசு எளிதாக சமாளித்து விடும்.

JACTO-GEO News in Tamil, Latest JACTO-GEO news, photos, videos | Zee News  Tamil

ஏனென்றால் நிதி நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் திமுக அரசு நிச்சயம் சம்பளத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தும். எனவே அதை மனதில் வைத்தாவது தமிழக அரசுக்கு உதவிட இவர்கள் இந்த நேரத்தில் முன் வரவேண்டும். அப்படிச் செய்தால் இவர்களின் மனிதநேயம் காலம் காலமாக போற்றப்படும். தமிழக வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்”என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் மீது மனது வைப்பார்களா? தமிழகத்தின் கொரோனா நிதி தேவைக்கு உதவி செய்ய முன்வருவார்களா?…

Views: - 140

0

0