முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா: அவரது மனைவிக்கும் தொற்று உறுதி..!!

Author: Aarthi Sivakumar
31 March 2021, 1:54 pm
devagowda - updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,480 ஆக உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,566 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,468 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,

”என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 100

0

0