ஊரடங்கு பற்றி அறிவிப்பு இன்று வெளியாகிறதா..? இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

17 April 2021, 6:55 pm
narendra_modi_bjp_foundation_day_UpdateNews360
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடத்தை பிடித்து விட்டது. நாளொன்றுன்று 2.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

அதேவேளையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியையும் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு அமைச்சகத்தின் உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கற்க உள்ளனர்.

Views: - 33

0

0