முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.399.93 கோடி நன்கொடை : தமிழக அரசு தகவல்..!

Author: Babu
8 October 2020, 5:38 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.399.99 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வைரஸ் பாதிப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 9,980க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனாவை தடுக்க தமிழக அரசும், நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பாமல் இருக்க, பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நாள்தோறும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேற்று வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.399.93 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி அளித்து அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழக முதல்வர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 57

0

0