கொரோனாவால் வந்த சோகம் : ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

8 April 2021, 3:53 pm
Corona street seal - updatenews360
Quick Share

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 400 ஆக இருந்து வந்த சராசரி கொரோனா பாதிப்பு, தற்போது 4,000 மாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கொரோனா தொற்றின் பிடிக்கு சிக்கி வருகின்றனர். இந்தக் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அம்மாவட்டத்தில் 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்க மேலும் கொரோனா பரவாமல் இருக்க அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகளின் தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து சீல் வைத்தனர்.

இதேபோல, நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply