கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு

13 May 2021, 2:39 pm
+2 exam apply - updatenews360
Quick Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும், பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 52

0

0