தலைவிரித்தாடும் கொரோனா : 30ம் தேதி வரை மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்..!!

7 April 2021, 8:43 pm
punjab_lockdown_updatenews360
Quick Share

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வரும் 30ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். உள்அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும், திறந்த வீதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply