வேலூர், நெல்லை, விருதுநகர்…! சுழற்றியடிக்கும் கொரோனா…! இன்றைய பாதிப்பு தெரியுமா?

1 August 2020, 12:48 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது.

ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மதுரை, நெல்லை, கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

இந் நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா  உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,180 ஆக அதிகரித்து இருக்கிறது. 5033 பேர் குணமடைய உயிரிழப்பு 61 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1086 ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5,387 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,850 பேர் குணமடைய, 2,226 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,078ஆக உயர்ந்து உள்ளது.