மிகக்குறைந்த சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி : மோசமான இடத்தில் தமிழகம்…!!

11 June 2021, 12:13 pm
Corona_Vaccine_India_UpdateNews360
Quick Share

கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கதடுப்பூசி ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது. இதனால், தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மிகக் குறைவாக செலுத்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் இடம்பிடித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழகத்தில் இதுவரை, 9 வதவீதம் பேருக்கே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் 22.5 சதவீதம் பேரும்,, குஜராத்தில் 20.5 சதவீதம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்த மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி குறைந்த அளவிலான மக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதற்கு காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாததே என்று கூறப்படுகிறது.

ஜனவரி, பிப்,,யில் 4.57 லட்சம் பேரும், மார்ச்சில் 28 லட்சம் பேரும், மே-வில் 30 லட்சம் பேரும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Views: - 116

0

0

Leave a Reply