கையை மீறிப் போன கொரோனா 2வது அலை : நீதிபதியை சந்திக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!!!

15 April 2021, 1:12 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சுகாதாரத்துறை செயலர் இன்று சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் பலியாகினர். இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Chennai_High_Court (1)

இந்த நிலையில், கொரோனா தொடர்பான வழக்கு ஒன்று விசாரணையின் போது, தலைமை நீதிபதியின் முன்பு ஆஜரான அரசு வழக்கறிஞர், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாகவும், கடந்தாண்டை விட மோசமாக இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றம் ஏதேனும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளதா..? என்று அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார். ஆனால், கொரோனா தொற்று பரவல் கையை மீறி சென்று விட்டதாகவும், அதேநேரத்தில் போதிய அளவிலான தடுப்பூசி இருப்பில் இருப்பதாகவும் கூறினார்.

radhakrishnan - updatenews360

மேலும், மருத்துவ ரீதியான பிரச்சனை என்பதால், முழு விபரம் அளிக்க சுகாதாரத்துறையினர் நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் கொடுக்க இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில், இன்று பிற்பகல் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள், நீதிபதியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளனர்.

Views: - 28

0

0