ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு : கொரோனா பரவல் குறித்து ஆலோசனை

15 May 2021, 6:00 pm
stalin - governor - updatenews360
Quick Share

சென்னை : திமுக ஆட்சியமைந்த பிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது. கடந்த 7ம் தேதி முக ஸ்டாலினுக்கு முதலமைச்சராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், திமுக ஆட்சியமைந்த பிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் மற்றும் முழு ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Views: - 173

0

0