#விடியல்_எப்போது_ஸ்டாலின் : கையை மீறிய கொரோனா… திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

15 May 2021, 1:52 pm
stalin-updatenews360-3.jpg May 15, 2021 58 KB 1366 by 768 pixels Edit Image Delete permanently Alt Text Describe
Quick Share

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இருந்த சராசரி பாதிப்பு, இன்று இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேவேளையில் மருத்துவமனைகளில் நிலவி வரும் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையினால் உயிர்பலியும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

Corona_UpdateNews360

இதனிடையே, பல்வேறு வாக்குறுதிகளுடன் ‘ஸ்டாலின் தான் வர்ராரு… விடியல் தர போறாரு’ என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த திமுக, இந்தக் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கிடத்தி வைப்பதில் இடமில்லாத அவல நிலை உருவாகியுள்ளது. மேலும், வடமாநிலங்களில் நிலவியதை போன்று, தகனம் செய்வதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

Corona Dead Bodies - Updatenews360

மேலும், கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக இடைவெளியை மறந்து அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நின்று மருந்துகளை பெற வேண்டிய சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், அதனை விமர்சித்து வந்த திமுக, இப்போது ஆட்சி பொறுப்பு கிடைத்தும், 2வது அலை பரவலை தடுக்கும் விஷயத்தில் தோல்வியடைந்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இந்தத் தருணத்தில் மிஸ் பண்ணுவதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும், திமுக கூறிய விடியல் இதுதானா..? எனக் கூறி சமூக வலைதளங்களில் #விடியல்எப்போதுஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 327

1

0