கொரோனா அதிகரிப்பு எதிரொலி : மதுரை மீனாட்சி அம்மன் உள்பட பல முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தடை

Author: Babu Lakshmanan
31 July 2021, 7:59 pm
meenakshi amman temple - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை மாவட்டம்‌ வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர்‌ திருக்கோயில்‌, கந்தக்கோட்டம்‌, அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்‌, சென்னை, சூளை, அருள்பிகு அங்காள பரமேஸ்வரரி திருக்கோயில்‌, பாடி, அருள்மிகு படவேட்டம்‌ திருக்கோயில்‌ மற்றும்‌ அருள்மிகு தேவிபாலியம்மன்‌ மற்றும்‌ இளங்காளியம்மன்‌ திருக்கோயில்‌ உள்ளிட்ட பல்வேறு முருகன்‌ மற்றும்‌ அம்மன்‌ திருக்கோயில்களில்‌ பக்தர்கள்‌ நேர்த்திக்‌ கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்தும்‌, பொங்கல்‌ மற்றும்‌ மாவிளக்கு படையலிட்டு தரிசனம்‌ செய்வார்கள்‌ தற்போது கொரானா தொற்று பரவும்‌ அச்சம்‌ உள்ளதால்‌ ஆகஸ்ட்‌ 1 முதல்‌ ஆகஸ்ட்‌ 9 முடிய அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறித்தியுள்ள நிலையில்,‌ பக்தர்கள்‌ சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதி இல்லை. திருக்கோயில்களில்‌ ஆகம விதிகளின்படி கால பூஜைகள்‌ நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலைத்துறையின்‌ சென்னை மண்டல இணை ஆணையர்‌ சி.ஹரிப்ரியா ‌ தெரிவித்துள்ளார்‌.

இதேபோல, திருச்சியில் சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 215

0

0