கொரோனா அச்சுறுத்தல் : தாமதமாகும் தலைவியின் வருகை… வெளியீட்டு தேதி பின்னர் அறிவிப்பு..

10 April 2021, 11:02 am
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி, தலைவி என்னும் திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கான கதையை இயக்குநர் ராஜமவுலியின் தந்தை கேவி விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்.,23ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் வெளியிட இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 38

0

0