கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது : பாரத் பயோடெக் நிறுவனம்

3 July 2021, 12:31 pm
covaxin vaccine - updatenews360
Quick Share

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை முடிவின்படி, கொரோனா தொற்று பாதித்த 130 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 77.8% கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுவது உறுதியாகியுள்ளது.

சார்ஸ் கோவிட் -2, டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 சதவீதமும், தீவிர கொரோனா தொற்றுக்கு எதிராக 93.4%மும் செயல்திறனுடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பா நாடுகளிடம் அங்கீகாரம் கோரியுள்ள நிலையில், 3வது கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 122

0

0