கோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்

15 June 2021, 4:34 pm
Covaxin_UpdateNews360
Quick Share

கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படியாகாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரையில் கோவாக்சின் தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் ஆகியவற்றிற்காக சுமார் ரூ.500 கோடியை முதலீடு செய்துள்ளது.

மேலும், பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனிடையே, அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதால், கூடுதல் விலையை கொடுக்க மத்திய அரசும் தயாராக இல்லை.

இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு வழங்கும் ரூ .150 என்ற விலை கட்டுபடியான விலை அல்ல என்றும், நீண்ட காலத்திற்கு அந்த விலையில் கொடுப்பது சாத்தியம் அல்ல என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளின் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் இருப்பதால், அதனை ஈடுசெய்ய தனியார் சந்தைகளில் அதிக விலையில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 122

0

0