கொரோனாவுக்கு இந்தியாவில் தயாராகும் மருந்து…! மனிதர்களிடம் சோதிக்க அனுமதி

30 June 2020, 9:19 am
Quick Share

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து மனிதர்களிடம் விரைவில் பரிசோதிக்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் தொடக்க வெற்றியை தொட்டிருக்கிறது. ஐதாராபத்தை சேர்ந்த அந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் தடுப்பு மருந்தான கோவாக்சின்  விலங்குகளிடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மனிதர்களிடம் சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது அனுமதி அளித்திருக்கிறது.  ஜூலையில் மருந்தின் முதல் மற்றும் 2ம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும்.

ஐசிஎம் ஆர், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்துள்ளது. விரைவில் இது அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என்று தெரிகிறது.

Leave a Reply