காதல் கிரிக்கெட்டில் விழுந்திடுச்சு விக்கெட்டு… மைதானத்தில் காதலியிடம் திடீர் propose செய்த சென்னை வீரர்… வைரல் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
7 October 2021, 8:42 pm
Deepak-chahar-0-updatenews360
Quick Share

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி வீரர் தனது காதலியிடம் திடீரென காதலை சொன்ன நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று பிற்பகல் நடந்த இந்தப் போட்டியில் பஞ்சாப் – சென்னை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெயிக்வாட் (12), மொயின் அலி (0), உத்தப்பா (2), ராயுடு (4), தோனி (12) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். மறுமுனையில் டூபிளசிஸ் மட்டுமே சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் 76 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப்பிற்கு அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார். சென்னை அணியின் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால், 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Deepak-chahar-0-updatenews360-_2_

குறிப்பாக, பவர் பிளே ஓவர் ஸ்பெஷலிஷ்ட்டான தீபக் சாஹர், 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இவர் சரியாக பந்து வீசியிருந்தால் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும் என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு தீபக் சாஹர் காதல் கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்.

வீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் பெவிலியன் பகுதிக்கு சென்ற தீபக் சாஹர், தனது காதலியிடம் திடீரென Propose செய்தார். தனது பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவரது காதலிக்கு போட்டு விட்டார். பின்னர், மற்றொரு மோதிரத்தை காதலியிடம் கொடுத்து போடச் செய்தார். சென்னை அணியின் போட்டியில் தோற்றிருந்தாலும், மைதானத்தில் சென்னை வீரரின் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே ஆதரவையும், விமர்சனத்தையும் எழுந்துள்ளது.

Views: - 419

0

0