கிருஷ்ணசாமி கல்லூரியில் மாணவி மர்ம சாவு… நீதி வேண்டி போராடும் பொதுமக்கள்… டுவிட்டரில் டிரெண்டாகும் #Justiceforpraveena!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 11:10 am
Quick Share

கடலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் பிரவீணா (18), விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று தங்கியிருந்த விடுதியின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் இறந்த நிலையில் இருந்த மாணவி பிரவீணாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி இறந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, உறவினர்களும், பாமகவினரும் கல்லூரி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

மாணவியின் உறவினர்கள் கல்லூரி எதிரே நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில், அங்கு வந்த நெல்லிக்குப்பம் போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 755

2

0