வகுப்பை கட் அடித்ததால் ஆத்திரம்… மாணவனை காட்டு அடி அடிக்கும் ஆசிரியர்…!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Author: Babu Lakshmanan
14 October 2021, 4:51 pm
School teacher - updatenews360
Quick Share

கடலூர் : கடலூர் அருகே பள்ளி மாணவனை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் காட்டுத்தனமாக அடிக்கும் வீடியோ ஒன்று சமக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் சரியாகப் பள்ளிக்கு வராமல் இருந்து வந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர், அந்த மாணவன் வகுப்பிற்கு வந்த போது, அவரை முட்டிபோடச் செய்துள்ளார்.

அப்போது, பள்ளிக்கு செல்வதாகக் கூறி விட்டு, மாணவன் வகுப்பை கட் அடிப்பது தெரிய வரவே, ஆத்திரமடைந்த ஆசிரியர், அங்கிருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார்.

இந்த சம்பவத்தை வகுப்பில் இருந்த சக மாணவர்களில் ஒருவர் தனது செல்போன் மூலம் படம்பிடித்துள்ளார். மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவனை ஆசிரியர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Views: - 165

0

0

Leave a Reply