ரசிகர்களுக்கு கட்-அவுட், அப்பா, அம்மாவுக்கு கெட்- அவுட் : நடிகர் விஜயின் புதிய முழக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 9:31 pm
Vijay - Updatenews360
Quick Share

நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம்போல்தான் தெரிகிறது.

Vijay (Actor) Wiki, Age, Wife, Family, Children, Biography & More – WikiBio

உருவானது விஜய் மக்கள் இயக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அவர் அறிவித்தார். அக்கட்சிக்கு தன்னை பொதுச் செயலாளராகவும் மனைவி ஷோபாவை பொருளாளராகவும் நியமித்துக் கொண்டார்.

Vijay Makkal Iyakkam Flag in jpg | Thalapathy Vijay | Flickr

ஆனால் இதற்கு நடிகர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கையும் விட்டார். இதனால் பொருளாளர் பதவியை ஷோபா உடனே ராஜினாமா செய்தார். கட்சிக்கு மூடு விழாவும் நடத்தப்பட்டது.

தந்தை – மகன் பிரச்சனை

என்றபோதிலும், இப்பிரச்சனை கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வெடித்தது. கட்சியை பதிவு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டு கொடுத்த மனுவை எஸ்.ஏ. சந்திரசேகர் திரும்பப்பெறாததால் ஏற்கனவே அளித்த மனுவில் உள்ளபடி 3 பெயர்களில்
ஏதாவது ஒன்றை கட்சிக்கு தேர்வு செய்யும்படி, அவருக்கு ஒரு நினைவூட்டல் கடிதத்தை தேர்தல் கமிஷன் அனுப்பியது.

Throwback photo of Vijay with his parents goes viral | Deccan Herald

இதனால் நடிகர் விஜய் கொதித்துப் போனார். தனது வக்கீல் மூலம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினார். அதில் எக்காரணம் கொண்டும் எனது பெயரையும் எனது மன்றத்தின் பெயரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தார்.
அதை தேர்தல் கமிஷனும் ஏற்றுக்கொண்டது.

தந்தை மீது வழக்கு தொடர்ந்த விஜய்

இருந்தபோதும் தந்தையின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளை விரும்பாத விஜய் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவோ தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உட்பட 11 நபர்களுக்கு தடை விதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த வழக்கு வருகிற 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்?

தந்தை தன்னை அரசியலில் பகடைக்காயாக பயன்படுத்துவதாக கருதும் நடிகர் விஜய், அவரை பலவழிகளிலும் ஓட ஓட விரட்டுகிறார். அதேநேரம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் போட்டியிடுவதற்கு விஜய் கிரீன் சிக்னல் காட்டி விட்டார்.

Vijay arrives on a bicycle to register his vote in TN Elections; view pic |  Tamil Movie News - Times of India

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவருடைய வீட்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது. எனினும் இதில் தனது பெயரையோ, தனது மன்றத்தின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்ற வழக்கமான நிபந்தனையை அவர் விதித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு அறிவுரை

2019 டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தினர் 131 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அப்போது தனது ரசிகர் மன்றத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று விஜய் அறிவுரை கூறியிருந்தார்.

Vijay selfie with fans in Neyveli goes viral

ஆனால் தற்போது நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தனது மன்றத்தினர் போட்டியிடுவதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த தேர்தலில் ரசிகர்களை களமிறக்கி தனது பலத்தை சோதனை செய்வதற்காக அவர் இப்படி பலப் பரீட்சை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சியில் வரோம், நல்லாட்சி தரோம்

இதனால் விஜய் ரசிகர் மன்றத்தினர் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கின்றனர். “2021-ல் உள்ளாட்சியில் வரோம், 2026-ல் நல்லாட்சி தரோம்” என்று மதுரை முழுக்க அவர்கள் போஸ்டர் அடித்து பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

உள்ளாட்சியில் வாரோம், நல்லாட்சி தாரோம்.. மதுரையில் போஸ்டர் ஒட்டி விஜய்  ரசிகர்கள் அதகளம்!

மேலும், முன்பு எம்ஜிஆர் போட்டோக்களில் விஜய் உருவத்தை பொருத்தி போஸ்டர் ஒட்டி வந்த அவரது ரசிகர்கள் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் உருவத்தையும் பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டத் தொடங்கியுள்ளனர்.

அண்ணா யாரு தளபதி விஜய்

“நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணாய் இருந்தார்” என்று அண்ணாவைப் பற்றி எம்ஜிஆர் பாடிய பாடல் வரிகளை போஸ்டராக அச்சடித்து, “எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா… தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா… என்ற வாசகங்களை பெரிதாக அச்சிட்டு அதற்கு கீழே அண்ணா யாரு?… தளபதி” என்று மதுரை தெற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதிரடி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா; விஜய் படத்தை மார்ஃபிங் செய்து போஸ்டர்  ஒட்டிய ரசிகர்கள்

ஏற்கனவே விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய திண்டுக்கல் ரசிகர்கள், “தம்பி வா! தலைமை ஏற்க வா!” என்ற வாசகங்களுடன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடமிருந்து விஜய் தங்க செங்கோல் பெறுவது போல் ஒரு சித்தரிக்கப்பட்ட காட்சியை போஸ்டராக அச்சிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தம்பி வா! தலைமை ஏற்க வா!' நடிகர் விஜயை அடுத்த முதல்வராக்க தூண்டும்  ரசிகர்கள்!

இரட்டை நிலைப்பாடு

இப்படி ஒரு பக்கம், அரசியலில் ரசிகர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு, இன்னொரு புறம் பெற்ற தாய், தந்தை விரட்டியடிப்பு என்ற விஜயின் இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போது அரசியல் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Master actor Thalapathy Vijay filed a civil lawsuit against 11 people  including his father SA Chandrasekar and mother Shoba as per reports -  Entertainment News India - Thalapathy Vijay: थलापति विजय ने

இதுபற்றி கோடம்பாக்க திரையுலக முக்கிய பிரமுகர்கள் கூறும்போது, “நடிகர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மன்றத்தை களமிறக்குவார் என்றும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அவருடைய இயக்கத்தினர் போட்டியிடுவார்கள் என்றும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Pay tax promptly and punctually: HC imposes ₹1 lakh fine on actor Vijay for  seeking tax exemption on Rolls Royce

பெற்ற தாய், தந்தையை விட தனது ரசிகர் மன்றத்தினர் அரசியலில் ஈடுபட அவர் சம்மதித்தற்கு முக்கிய காரணம், தனது குடும்பத்தினர் அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் தன்னை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயம்தான்.

தவிர அவர்கள் சொல்படிதான் கேட்டு நடக்க வேண்டிய தர்மசங்கட நிலை உருவாகிவிடும் என்பதை விஜய் நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆனால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்றால், தான் சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பார்கள். அவர்களை வேலை வாங்குவதும் எளிதான காரியம்.

பிரச்சனைக்கு முக்கிய காரணம்

அப்பா தவறு செய்தால் அது கட்சிக்கு கெட்ட பெயராகி விடும். ரசிகர் மன்றத்தினர் என்றால் அவர்களை கட்சியை விட்டே தூக்கி விடலாம். இந்த நெருடல் காரணமாகத்தான் அரசியலில் நுழைவதை விஜய் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். ஆனால் தந்தை சந்திரசேகரோ
சட்டப்பேரவை தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தல் களத்தில் விஜய் குதிக்க இதுவே அருமையான தருணம். எனவே மகன் அரசியலில் உடனடியாக நுழைய வேண்டும் என்று விரும்புகிறார். இதுதான் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு மூல காரணம்.

Actor Vijay fans to contest TN local body polls

அதேநேரம் தனது குடும்பத்தினர் அரசியலுக்குள் நுழைவதை விஜய் அறவே விரும்பவில்லை. இதை அவர் வெளிப்படையாகவே தனது வீட்டில் சொல்லிவிடலாம். அல்லது பொதுவெளியில்
கூட பகிரங்கமாக இதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் கோர்ட்டு நடவடிக்கை என்று பெற்ற தாய், தந்தையை அலைக்கழிப்பதெல்லாம் எவ்விதத்திலும் நடிகர் விஜய் போன்றவர்களுக்கு அழகல்ல. ஏனென்றால் மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் முதல் இரு இடத்தில் இருப்பவர்கள் தாயும் தந்தையும்தான். அவர்கள் இல்லாமல் விஜயால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது.

எல்லா குடும்பத்திலும் நடப்பதுதான்

அதனால் அவர்களை கோர்ட் படியேற வைப்பது ஜீரணிக்க முடியாத விஷயம். என்னதான் விஜய் குடைச்சல் கொடுத்தாலும் கூட எஸ்ஏ சந்திரசேகர் அண்மையில் தனது, நான் கடவுள் இல்லை படவிழாவில் பேசும்போது, “அப்பா – பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம், எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதான். குடும்பம் என்றால் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான்” என பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். இதில் அவருடைய மனவேதனையும் சேர்ந்தே வெளிப்படுகிறது. அதனால் எந்தச் சூழலிலும் தாய், தந்தையை மகன் விட்டுக்கொடுக்க கூடாது” என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

Views: - 205

0

0