பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்

2 September 2020, 10:25 pm
Quick Share

டெல்லி: ரஷ்யாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மூன்று நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டு சென்றார்.

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 75ம் ஆண்டு விழாவை நினைவு கூறும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு (CSTO), காமன்வெல்த் தனி நாடுகள் (CIS) ஆகியவற்றின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் செர்கே சோயிகு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நாளை முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு புறப்பட்டு சென்றார். இந்த கூட்டத்தில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென் வி பென்கே மற்றும் பாக்., பாதுகாப்பு அமைச்சர் பெர்வேஜ் கட்டாக் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பயணத்தின் போது ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் செர்கே சோயிகு-ஐ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்துவதோடு,

பாதுகாப்பு கருவிகள் வாங்குவது தொடர்பான பல திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது குறித்து மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லையில் பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 0

0

0