டெல்லி ஜமியா பல்கலை நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் கைது..!!

By: Babu
15 October 2020, 4:07 pm
Delhi jamia university - updatenews360
Quick Share

டெல்லி : டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் அமைந்துள்ள பிரபல ஜமியா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. அதில், சந்தேகத்திற்குரிய வகையில் மாணவர் ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது.

மேலும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும், ஆள்மாறாட்டம் செய்த நபரும் ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டது தெரிய வந்தது. அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளர், மாணவரின் பயிற்சி கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகக் கூறி, இந்தத் தேர்வை எழுதக் கூறியதால், அவர் இந்த செயலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புள்ள பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் தேர்வெழுத வேண்டிய மாணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 42

0

0