விவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..!!

27 January 2021, 5:33 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

டெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. போலீசார் அனுமதித்த நேரத்திற்கு முன்பாகவே, டெல்லிக்குள் புகுந்த விவசாயிகளின் பேரணி வன்முறையாக மாறியது. டிராக்டர் மூலம் பேருந்து உள்ளிட்டவற்றை இடித்து சேதப்படுத்தினர். இதனால், தலைநககே ஸ்தம்பித்தது. மேலும், செங்கோட்டையை முற்றுகையிட்டதுடன், விவசாயிகள் தங்களின் கொடியையும் கோட்டையின் மீது ஏற்றினர்.

Red_Fort_Farmers_UpdateNews360

இந்த டிராக்டர் பேரணியின் போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வந்த விவசாயிகள், போலீசாரையும் கடுமையாக தாக்கினர். மேலும், பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இந்த பேரணியின் போது, விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனிடையே, விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் ஊடூருவி விட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து வந்தனர். எனவே, மீண்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நேற்று நள்ளிரவு முதல் தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டம் நடத்தி வரும் 40 சங்கங்களில் ஒன்றான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் இந்த முடிவை எடுப்பதாகவும், குடியரசு தினத்தை சீர்குலைப்பதற்காக நாங்கள் போராட்டத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

டெல்லியில் நடந்த வன்முறையினால் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக நடத்தி வந்த அமைதியான போராட்டம் வீணாகி விட்டதாக விவசாய அமைப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0