ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : நினைவிட விழாவில் ஓபிஎஸ் உருக்கம்…!!!

27 January 2021, 12:54 pm
OPS - updatenews360
Quick Share

ஏழேழு பிறவி எடுத்தாலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடமைப்பட்டிருப்பதாக, அவரது நினைவிட திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ரூ.80 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அவர் கூறியதாவது :- கனத்த இதயத்தோடும் கண்ணீர் வழியும் விழிகளோடும் உங்கள் முன் நிற்கிறோம். ஏழுழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இது சாதாரண நினைவிடம் அல்ல. ஜெயலலிதாவின் நினைவலைகள். அம்மாவிற்காக இத்தனை நாட்கள் நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அதுதான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது. அவர் வகுத்த திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். அதற்கான நன்றியை ஒருபோதும் அவர்கள் மறக்க மாட்டார்கள், எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0