அரசு உலக அளவில் பாராட்டுக்களை பெற்ற எடப்பாடியாரின் அரசு : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்..!! (முழு பட்ஜெட்)

23 February 2021, 11:26 am
OPS budjet - updatenews360
Quick Share

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

11வது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு கேட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது : –

அதிமுக அரசு ஆட்சி காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்யாது என்று எதிர்கட்சிகள் கூறின.

எதிர்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கி 5 வருடங்களை அதிமுக அரசு பூர்த்தி செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மத்திய அரசின் நல் ஆளுமை விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க அரசாக தமிழக அரசை 3வது ஆண்டாக இந்தியா டுடே தேர்வு செய்துள்ளது.

கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை கவர்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்கள் ஏராளமானவை முன்வருகின்றன.

எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தால் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளது

கொரோனாவை எதிர்கொண்ட மாநிலங்களில் தமிழகம் அனைவருக்கும் முன்னோடியாக உள்ளது

கொரோனாவுக்கு ஆளானவர்களில் 2 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ. 4 லட்சம் காப்பீட்டுத் தொகை

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு – காவல்துறைக்கு வரும் நிதி ஆண்டிற்கு ரூ.9,567.93 கோடி ஒதுக்கீடு

தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு

அடுத்த சில ஆண்டுகளில் 2,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் ரூ.13,352 கோடி செலவு

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்

மீன்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.580.97 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு

இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை – ஆய்வு

இடைக்கால பட்ஜெட்டில் அம்மா கிளினிக்குகளுக்காக ரூ. 144 கோடி ஒதுக்கீடு

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பட்டில் உள்ளன.

Views: - 9

0

0