ஒரு சதுர அடியை காட்டுங்க… இல்ல அரசியலை விட்டு விலக ரெடியா..? தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓபிஎஸின் இளைய மகன் பகிரங்க சவால்..!!

22 January 2021, 3:43 pm
Jaya pradeep - thanga tamil selvan - updatenews360
Quick Share

தேனி : தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, கேரள மாநிலத்தில் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்கள் இருப்பதாகவும், அதனை கேரளாவில் ஏதோ ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாகவும், அதனை சுட்டிக்காட்டி பொய்யான தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். பல முறை பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் தமிழக மக்களையும் பத்திரிகைகளையும் ஏமாளிகள் என நினைத்துக்கொண்டு வழக்கமான பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கேரளாவிற்கு அழைக்கும் இடத்திற்கு நான் செல்கிறேன். எங்களுடன் பத்திரிகையாளர்களும் வரட்டும், அந்த இடத்தில் நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்து இருக்கிறோம் என்று ஆதாரபூர்வமாக ஒரு சதுர அடி அளவுக்கு நிலத்தை காண்பிக்கட்டும்.

அந்த சொத்து முழுவதையும் நான் அவருக்கே கொடுத்து விடுகிறேன். அப்படி எங்களுக்கு சொத்துக்கள் இல்லை என்று நிரூபிக்கத் தவறினால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை விட்டு விட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்று பத்திரிகை நண்பர்கள் நீதிபதிகளாக இருந்து கேட்டுச் சொல்லுங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப்பின் இந்த அறிவிப்பு வைரலாகி வரும் வரும் நிலையில், இதற்கு தக்க பதிலை தங்க தமிழ்ச்செல்வன் கொடுப்பாரா..? என்று அவரது ஆதரவாளர்களே காத்துக் கொண்டிருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்… இந்த சவாலை அவர் ஏற்றுக் கொள்வாரா..? இல்லையா..? என்று….

Views: - 0

0

0