விவசாய கிணற்றுக்குள் பாய்ந்த கார்… 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தந்தை, மகள் சடலமாக மீட்பு : உயிர்தப்பிய தாய்..!!!

Author: Babu Lakshmanan
17 November 2021, 1:49 pm
car fall in well - updatenews360
Quick Share

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த காரில் தந்தை மற்றும் மகளை 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் என்பவர் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும், சுஷ்மிதா என்ற மகளும் உள்ளனர். வீரன் தனது குடும்பத்திருடன் வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு தனது காரில் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். இதேபோல், கடந்த இரு தினங்களுக்கு முன் சொந்த ஊரான மேட்டூருக்கு வந்த அவர், இன்று குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வீரனின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருடைய, 65 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. அப்போது காரின் கதவு திறந்ததால், வெளியே விழுந்த உமா தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை அருகே இருந்தவர்கள் மீட்டதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அருகே இருந்த பொதுமக்கள் காரிமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேன் உதவியுடன் காரில் சிக்கிய வீரன் மற்றும் சுஷ்மிதாவை மழைக்கு மத்தியில் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

ஆனால் கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்தததை அடுத்து, 5 விசை பம்புகள் மூலம், தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் சென்று, மின் விளக்குகள் உதவியுடன், மழைக்கு மத்தியில், தொடர்ந்து நடந்து வந்த மீட்பு பணியை துரிதப்படுத்தி, இரவு 8:45 மணிக்கு கிணற்றில் இருந்து பொலிரோ காருடன் தந்தை மற்றும் மகளை மீட்டனர்.

அதை தொடர்ந்து இருவரின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பிறகு காரிமங்கலம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 415

0

0