சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 9:01 am
Quick Share

தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்ததாகவும், அப்போது, வெகு நேரம் காத்திருந்த பெண்களுக்கு பரிசு பொருட்களை பாமகவினர் வழங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க: சின்னத்தால் வந்த சிக்கல்… திண்டுக்கல் லியோனியால் அதிர்ந்து போன திமுக தொண்டர்கள்… பிரச்சாரத்தில் சலசலப்பு..

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் கடத்தூர், கொட்டாவூர், நடூர், ஒப்பிலிநாயக்கனல்லி, புது ரெட்டியூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நடூர் என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு, பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க: ஊழல் செய்த பணம் செந்தில் பாலாஜியிடம் உள்ளதா? ஜோதிமணி பேச்சால் திமுக அப்செட்..!!

வேட்பாளருக்காக கட்சி தொண்டர்கள் வெகு நேரம் காத்திருந்ததால், வேட்பாளர் வருவதற்கு முன்பாகவே வானவெடி வெடித்து கிராம மக்களே அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

மேலும் படிக்க: கச்சத்தீவு குறித்து திமுக பேசியது அத்தனையும் கட்டுக்கதை.. கருணாநிதி சம்மதித்து தான் நடந்தது : அண்ணாமலை புகார்!

அப்போது, இரவு நேரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை சந்தித்தார் சௌமியா அன்புமணி. வேட்பாளரை கண்காணிக்கும் குழுவினர் கண்டுகொள்ளாததால் சுமார் இரவு 11:30 வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Views: - 150

0

0