காங்கிரஸை காலி செய்தாரா உதயநிதி? சனாதன சர்ச்சையால் காங்கிரஸ் தோல்வி : மூத்த தலைவர் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 4:17 pm
Udhay
Quick Share

காங்கிரஸை காலி செய்தாரா உதயநிதி? சனாதன சர்ச்சையால் காங்கிரஸ் தோல்வி : மூத்த தலைவர் பகீர்!!

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.

அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.

அவரின் பேச்சு தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றாலும்.. வடஇந்தியாவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. வடஇந்தியாவில் மிக கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. உதயநிதி ஸ்டாலின் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு சனாதன எதிர்ப்பு பேச்சுக்கள் முக்கிய காரணமாக அமைந்ததாக இணையத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில்., பாஜக 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் பாஜக 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். சத்தீஸ்கரில் ., பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத், சனாதனத்தை எதிர்த்ததாலே காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதாக கூறியுள்ளார். சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையத்தில் இணையத்தில் பாஜக ஆதரவாளர்கள் பலர் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர். அவரின் பேச்சுக்கள்தான் காங்கிரசுக்கு எதிராக திரும்பிவிட்டது என்று விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றனர். இப்போது உங்களால் அப்படி பேச முடியுமா? இனி நீங்கள் சனாதனத்தை எதிர்க்க கூடாது. முடிந்தால் எதிர்த்து பாருங்கள்.. காங்கிரஸ் கட்சி 2024லும் வீழ்ச்சி அடையும் என்று விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Views: - 236

0

0