சபாநாயகர் போட்ட குண்டு.. திடுக்கிட்ட அமலாக்கத்துறை : உளவுத்துறை சொன்ன செய்தி.. கிளம்பி வரும் டெல்லி!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 5:22 pm
Appavu - Updatenews360
Quick Share

சபாநாயகர் போட்ட குண்டு.. திடுக்கிட்ட அமலாக்கத்துறை : உளவுத்துறை சொன்ன செய்தி.. கிளம்பி வரும் டெல்லி!

அரசு மருத்துவரிடமிருந்து ரூ.20 லட்சம் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவமானது, தேசிய அளவில் பரபரப்பை தந்துவிட்டது.

இதனிடையே, அமலாக்கத்துறையிடம் இருந்து தனக்கு 3 மாதங்களாக மிரட்டல் வந்தது என்று சபாநாயகர் அப்பாவு சொல்லவும், அதற்கு மேல் பரபரப்பு கூடியது.

அப்பாவு சொல்லும்போது, “பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு குறித்து நூல் விடுவார்கள். அதாவது உங்கள் மேல் பிரச்சனை இருக்கிறது.. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார்கள். எனக்கு வேண்டிய ஆள் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தி வைத்துள்ளேன் என்றெல்லாம் சொல்வார்கள்.. முதலில் அன்பாக பேசுவார்கள்.. பிறகு, மிரட்டுவார்கள். பிறகு மீண்டும் சமாதானமாக பேசி பேரம் பேசுவார்கள். சமாதானத்திற்கு உடன்படியவில்லையென்றால் உடனே நோட்டீஸ் அனுப்புவார்கள்.

என்னிடம் கூட சிலர் 3 மாதங்களாக பேசிக்கொண்டே வந்தனர். ஆனால் நான் காது கொடுத்து கேட்டதில்லை. விவசாயம் செய்து முன்னுக்கு வந்த என்னையே மிரட்டுறீங்களா என கேட்டேன்? என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள். என்னை போன்றே பலருக்கும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது” என்றெல்லாம் சொல்லி அதிர வைத்தார் அப்பாவு. ஒரு மாநில சட்டமன்றத்தின் தலைவராக இருப்பவர், மத்திய அரசின் முக்கிய விசாரணை அமைப்பின் மீது கடுமை யான குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்தியிருப்பதை மத்திய பாஜக அரசு, மிக எளிதாக கடந்து செல்லவில்லையாம்.. மாறாக, மிக மிக சீரியசாக இந்த குற்றச்சட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

அந்த வகையில், அப்பாவுவின் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிரமாக விசாரிக்குமாறு மத்திய உளவுத்துறையினருக்கு டெல்லியிலிருந்து உத்தரவும் வந்துள்ளதாம். இப்போது அவரை யார் மிரட்டியிருக்ககூடும் என்கிற விசாரணையை தமிழக அமலாக்கத்துறை தரப்பில் உளவுத்துறை விசாரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அப்பாவுவிடமும் விசாரிக்கவிருக்கிறார்களாம்.

இந்த விசாரணையில், அப்பாவுவை மிரட்டியவர்கள் அமலாக்கத்துறையினரா அல்லது போலி நபர்களா ? என்கிற விபரங்களெல்லாம் தெரிந்து விடும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்

Views: - 161

0

0