தேர்தல் அறிக்கையில் சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுகவை சீண்டும் விசிக!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2021, 7:40 pm
Rajiv Convicts DMK VCK-Updatenews360
Quick Share

ராஜீவ் கொலைக் கைதிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர், தற்போது ஆயுள் கைதிகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

DMK ally Cong staunchly opposes release of Rajiv case convicts - DTNext.in

இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

7 பேர் விடுதலை : திமுக கூட்டணி கட்சிகள் குரல்

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, அதன் கூட்டணிக் கட்சிகளான விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் தமிழக அரசு, இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

MK Stalin urges TN Governor to expedite release of Rajiv Gandhi case  convicts | The News Minute

நளினி மனு

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் கூட என்னை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். எனவே என்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார்.

Rajiv Gandhi killer Nalini attempts suicide in prison - India News

ஆனால் இதற்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக உள்துறை இணை செயலாளர் பத்மநாபன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய பதில் மனுவில், “முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி, நளினி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி, நளினி தாக்கல் செய்த வழக்கும், விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தள்ளுபடியாகி விட்டது. அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பேரறிவாளன் மனுவை நிராகரித்த மத்திய அரசு

அந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தண்டனை குறைப்பு தொடர்பாக, குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க தகுதியானவர். ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால், அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. எனவே, அவரின் மனுவை ஏற்க கூடாது. அதனை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

Pardon Perarivalan and Put an End to This Cruel Game of Pass the Parcel

தமிழக அரசின் மனுவிற்கு விசிக எதிர்ப்பு

தமிழக அரசின் இந்த மனுவால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளது.
உடனடியாக தோழமையின் சுட்டுதல் என்பதுபோல், அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டரில் ஒரு பதிவை போட்டார்.

அதில், “முப்பதாண்டுகளாக சிறையில் வாடுகிறார், சகோதரி நளினி. விடுதலைக்காற்றை சுவாசிக்க காத்திருக்கிறார். வெளிச்சக்கீற்றை காண எதிர்பார்த்திருக்கிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

DMK seals deal with VCK, CPI giving 2 LS seats each

பொதுவாக தேர்தல் வாக்குறுதிகளை ஒரு அரசு நிறைவேற்றவில்லை என்றால் அதை சுட்டிக் காண்பிப்பதோடு, அதன் கூட்டணிக் கட்சிகள் முடித்துக்கொண்டு விடும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கோரிக்கைக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கும் விதமாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதியின் பக்கத்தையும் அந்த பதிவுடன் இணைத்து இருந்ததுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.

திமுகவை சீண்டிய விசிக

திமுக ஆட்சி அமைந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட எத்தனையோ முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

VCK gets 6 seats, CPI finalises pact in DMK alliance - DTNext.in

என்றபோதிலும் இதுவரை, தேர்தல் அறிக்கையில் கூறிய எந்தவொரு விஷயத்தையும் இப்படி ட்விட்டர் பதிவுடன் இணைத்து வெளியிட்டு திமுகவிடம் விசிக கோரிக்கை வைத்தது, கிடையாது.

திமுக – விசிக மறைமுக மோதல்?

இப்போதுதான் முதல்முறையாக, “தேர்தல் அறிக்கையில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஏன் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்புவதுபோல் கூறியிருப்பது, திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே மறைமுக மோதல் உருவாகி இருக்கிறதோ? என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்களிடம் எழுப்பி உள்ளது.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக
அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 700 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

DMK seeks seat wish list from allies, VCK may get less - DTNext.in

அதேநேரம் பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 வகை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசாணையில் இப்படியொரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால், அப்போதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்பது விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.

எதிர்க்கும் பாஜக, காங்கிரஸ்

தவிர மத்திய பாஜக அரசும், ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரசும் 7 பேர் விடுதலைக்கு எதிராக உள்ளன என்பதும் வெளிப்படையாக தெரிந்த விஷயம். அதனால்தான் தமிழக ஆளுநர் ரவியும் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறார்.

BJP, Congress caught in quagmire of ticket distribution ahead of Assembly  polls, Opinions & Blogs News | wionews.com

7 பேர் விடுதலை : தயங்கும் திராவிட கட்சிகள்

மேலும் தற்போது ஒரு சில முக்கிய விஷயங்களில் மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செல்வதையே திமுக அரசு விரும்புகிறது. அதனால்தான் 7 பேர் விடுதலைக்காக எந்த தீவிர முயற்சியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. பின்னாளில் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் தயங்கவும் செய்கிறது. இதே தயக்கம்தான் முந்தைய அதிமுக அரசிடமும் இருந்தது. அதனால்தான் அவர்களாலும் 7 பேர் விடுதலையில் எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியவில்லை.

Don't publish, telecast AIADMK ads targeting DMK: TN CEO to media | The  News Minute

இந்த விஷயத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் எந்த அரசு இருந்தாலும் இதே நடவடிக்கையைத்தான் மேற்கொண்டிருக்கும். விசிக, மதிமுக இன்னும் ஒரு சில தமிழ் அமைப்புகள் நினைப்பதுபோல் 7 பேர் விடுதலை என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

விசிக போடும் நாடகம்?

இருந்தபோதிலும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் இதை கூறியிருப்பதால் விசிக திமுகவை சீண்டிப் பார்க்கிறது. அதேநேரம் இது ஒரு நாடகமாக கூட இருக்கலாம். ஏனென்றால் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் பொதுவாக எல்லா கட்சிகளுமே போராட்டத்தில் ஈடுபடுவதுதான் வழக்கம்.

Budget will revive TN'seconomy: Thirumavalavan - DTNext.in

ஆனால் விசிக வெறும் டுவிட்டர் பதிவோடு முடித்துக் கொண்டுள்ளது. அக்கட்சி 7 பேர் விடுதலையில் திமுகவுக்கு எதிராக ஏதாவது போராட்டத்தில் ஈடுபடுமா? என்பது போகப்போகத்தான் தெரியவரும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 286

0

0